கத்திக்குத்து விவகாரம்: இனி புகைப்படம் எடுக்காதீர்கள் - சைஃப் அலி கான்

நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கடந்த 16-ந்தேதி நடந்த கொள்ளை முயற்சியில் அவர் கத்தியால் தாக்கப்பட்டார்.பாந்த்ரா வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டாம்.
கத்திக்குத்து விவகாரம்: இனி புகைப்படம் எடுக்காதீர்கள் - சைஃப் அலி கான்
Published on

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கடந்த 16-ந் தேதி நடந்த கொள்ளை முயற்சியில், அவர் 6 முறை கத்தியால் குத்தப்பட்டார். லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வங்கதேச நாட்டை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் தங்கள் மகன்களான தைமூர் அலி கான் மற்றும் ஜஹாங்கிர் அலி கானை போட்டோ எடுப்பதை தவிர்க்குமாறு புகைப்படக்காரர்களை (paparazzi) வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், பாந்த்ரா வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டாம் என்றும், வெளியே செல்லும்போதும் (அ) வீட்டிற்கு திரும்பும்போதும் அவர்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com