பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

இதுபோன்ற விசயங்களை இந்துக்கள் ஒருபோதும் செய்வது கிடையாது.வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு பாடம் கற்பிப்பதும் அந்த கடமையின் ஒரு பகுதியாகும்
பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Published on

பிரதமர் மோடியை நேற்று இரவு டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து பேசினார்.

பஹல்காமில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொடூர கொலை செய்யப்பட்ட சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த வாரம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பகவத், பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்குக் கடுமையான பதிலடியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். "மக்களிடம் அவர்களின் மதம் என்னவென்று கேட்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுபோன்ற விசயங்களை இந்துக்கள் ஒருபோதும் செய்வது கிடையாது.

நம்முடைய மனங்களில் வலி உள்ளது. நாங்கள் கோபத்தில் இருக்கிறோம் என பேசினார். நம்முடைய அண்டை வீட்டுக்காரர்களை நாம் ஒருபோதும் துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு தீங்கிழைப்பதோ கிடையாது. ஆனால், சிலர் தீங்கானவர்களாக மாறினால், வேறு என்ன வழி? மக்களை பாதுகாக்க வேண்டியது மன்னனின் கடமை.

மன்னன் தன்னுடைய கடமையை கட்டாயம் செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு பாடம் கற்பிப்பதும் அந்த கடமையின் ஒரு பகுதியாகும்" என பேசினார். நெற்றிய உரையாடலிலும் மோகன் பகவத் இதையே வலியறுத்தியதாக தெரிகிறது.

இதற்கிடையே நேற்று ராணுவ தளபதிகளுடன் நடந்த கூட்டத்தில் எதிர் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com