1 ஜிபி-க்கு ரூ.1 - மொபைல் டேட்டாவிற்கு தனி வரி... மத்திய அரசு ஆலோசனை!

அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.22,900 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
1 ஜிபி-க்கு ரூ.1 - மொபைல் டேட்டாவிற்கு தனி வரி... மத்திய அரசு ஆலோசனை!
Published on

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்படுத்துவதற்கு தனியாக வரிவிதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு தொலைத்தொடர்புத் துறைக்கு செப்டம்பர் மாதம்வரை கால அவகாசம் அளித்துள்ளது.

கூடுதல் வருவாய் ஈட்ட மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டிஜிட்டல் அடிமைத்தனம் மற்றும் திரை நேரத்தைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கங்கள் என கூறப்படுகிறது.

ஒரு ஜிபி (GB) டேட்டாவிற்கு ரூ.1 வரி விதிக்கப்பட்டால் கூட, அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.22,900 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மொபைல் ரீசார்ஜ்களுக்கு 18% ஜிஎஸ்டி (GST) வசூலிக்கப்படுகிறது. புதிய வரி அமலுக்கு வந்தால் இணையப் பயன்பாட்டுச் செலவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இது டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com