ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- RBI கவர்னர் தகவல்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வட்டி வகிதம் 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.வீடு, வாகன கடன்களுக்கான வட்டியிலும் மாற்றமில்லை.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- RBI கவர்னர் தகவல்
Published on

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதமாகும். 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வட்டி வகிதம் 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டு வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியிலும் மாற்றமில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com