'தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய்' - அண்ணாமலையை கடுமையாக தாக்கி பேசிய ராஜ் தாக்கரே

மும்பை என்பது அது ஒரு சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு?
'தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய்' - அண்ணாமலையை கடுமையாக தாக்கி பேசிய ராஜ் தாக்கரே
Published on

மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே தமிழர்களை இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.

தமிழரை பால்தாக்கரே விரட்டி அடித்தார் என்று ராஜ் தாக்கரே பேசியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழர்களை இழிவாக பேசியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com