பாலியல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கைது

அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது போலீசார் கைது செய்தனர்.
பாலியல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கைது
Published on

பெண் ஒருவர் 4 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகார் அடிப்படையில் போலீசார் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரதோரை கைது செய்துள்ளனர்.

ராகேஷ் ரதோர் உத்தர பிரதேச மாநிலம் சித்தாபூர் தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராகேஷ் ரதோர் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, போலீஸ் அவரை கைது செய்தனர். அவர் மீது போலீசார் பாலியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவர் உத்தர பிரதேச மாநில காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். கடந்த 17-ந்தேதி, பெண் ஒருவர் கடந்த நான்கு வருடமாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், அரசியல் வாழ்க்கை உருவாக்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்ததாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். போனில் பேசிய ஆதாரங்களை போலீசாரிடம் அந்த பெண் ஒப்படைத்துள்ளார்.

கடந்த வாரம் அந்த பெண்ணின் கணவர் ஐந்து தனிநபர்களுக்கு எதிரராக தனித்தனியாக புகார் அளித்திருந்தார். அதில் ரதோர் மற்றும் அவரது மகன், தனது குடும்பத்தினரை வழக்கை திரும்பப்பெற வற்புறுத்தியதாக தெரிவித்திருந்தார்.

கடந்த 23-ந்தேதி சித்தாபூர் எம்.பி., எம்.எல்.ஏ.-வுக்களுக்கான நீதிமன்றம் ராகேஷ் ரதோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிராஞ்ச் நேற்று ரதோரின் முன்ஜாமின் மனுவை நிராகரித்தது. மேலும், சரணடைய உத்தரவிட்டது.

ராகேஷ் ரதோர் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்னதாக உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக சார்பிலும், சுயேட்சையாகவும் போட்டியிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியிலும் பணிபுரிந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com