மத்திய மந்திரிகள், முதல் மந்திரிகள் எக்ஸ் வலைதளத்தில் இடம்பெற்ற ஜெய்ஹிந்த் வாசகம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய மந்திரிகள், முதல் மந்திரிகள் எக்ஸ் வலைதளத்தில் இடம்பெற்ற ஜெய்ஹிந்த் வாசகம்
Published on

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

பிரதமர் மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

இதேபோல், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு உள்பட பலர் தங்களது எக்ஸ் வலைதளங்களில் ஜெய்ஹிந்த் என்ற வாசகங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com