பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க ராகுல் காந்தி பூஞ்ச் செல்ல இருப்பதாக தகவல்..!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.பூஞ்ச், ரஜோரில் பகுதிகளில் பொதுமக்கள் வீடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.
பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க ராகுல் காந்தி பூஞ்ச் செல்ல இருப்பதாக தகவல்..!
Published on

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டிய இந்தியா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்தது. அதன்படி முப்படைகளும் இணைந்து கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியா- பாகி்ஸ்தான் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. Mortar Shell குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இதில் எல்லையோரத்தில் வசித்து வந்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் குழந்தைகள் ஆவார்கள். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சேதமடைந்தன.

இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நாளை மறுதினம் நாளை பூஞ்ச் செல்ல இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் செல்வது இது 2ஆவது முறையாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com