கனமழை எதிரொலி: பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

பஞ்சாப்பில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கனமழை எதிரொலி: பஞ்சாப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு
Published on

சண்டிகர்:

வட மாநிலங்களில் பருவ மழை கொட்டி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.

சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை எதிரொலியால் செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com