குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு இது தான் காரணம்,.. முதல்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்

குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் விழுந்து மாயமானவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்
குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு இது தான் காரணம்,.. முதல்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Published on

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைந்துள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது.

பாலம் இடிந்து விழுந்ததால் அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் விழுந்து மாயமானவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு அதன் 'பெடெஸ்டல், ஆர்டிகுலேஷன்' என்ற இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் எதிரொலியாக குஜராத் மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com