வரும் தேர்தலில் நிதிஷ்குமார் சென்றுவிடுவார்: பிரசாந்த் கிஷோர்

பீகாரில் 125 யூனிட் வரை எவ்வித மின் கட்டணமும் செலுத்த தேவையில்லை.இத்திட்டம் வரும் ஆகஸ்டு 1 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
வரும் தேர்தலில் நிதிஷ்குமார் சென்றுவிடுவார்: பிரசாந்த் கிஷோர்
Published on

பாட்னா:

பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

மக்கள் பயன்பெறும் வகையில் மின் நுகர்வில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளேன். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 125 யூனிட் வரை எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இத்திட்டம் வரும் ஆகஸ்டு 1 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 1. 67 கோடி பேர் பயன்பெறுவர்.

சூரிய சக்தி மின்சார திட்டமும் மேலும் பரவலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மானியம் வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு இலவச சூரிய மின் உற்பத்தி உபகரணங்களும் வழங்கப்படும். இது மின் நெருக்கடியைக் குறைக்க உதவும். அனைத்து மக்களும் எளிய மின்சாரம் பெறவேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நிதிஷ்குமார் அறிவிப்பு பற்றி ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் மற்றும் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 20 ஆண்டு கால ஆட்சியில் அவருடைய வாக்குறுதிகள் நீண்டகாலம் நம்பத்தக்க ஒன்றாக இருந்தது இல்லை. பீகாரில் சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில், 125 யூனிட் இலவச மின்சாரம் என அவர் அறிவித்து இருக்கிறார். இதனை நம்ப ஒருவரும் தயாராக இல்லை. பீகாருக்கு புதிய முதல் மந்திரி வருவார். நிதிஷ்குமார் சென்று விடுவார் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com