மத்திய பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.பொருளாதார நிபுணர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.
மத்திய பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Published on

புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி உள்ளிட்ட சூழல்களுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பான கருத்துகளைக் கேட்பதற்காக, புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

இந்தக் கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com