பிரதமர் மோடியுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

சீன வெளியுறவு மந்திரி வாங் யீ அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார். வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடியுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு
Published on

புதுடெல்லி:

சீன வெளியுறவு மந்திரியான வாங் யீ இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். அவர் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வாங் யீ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து இருவரும் கலந்து ஆலோசித்தனர்.

இந்நிலையில், எல்லையில் சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியை டில்லியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணம் குறித்து பிரதமர் மோடியுடன் வாங் யீ பேசினார்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com