பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த விமானம்: பதைபதைக்கும் படங்கள்..!

குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம் விடுதியில் புகுந்தது.விமானத்தின் பின் பகுதி மட்டும் கட்டிடத்திற்கு வெளியில் தெரியும்படி காணப்பட்டது.
பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த விமானம்: பதைபதைக்கும் படங்கள்..!
Published on

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர்.

இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் குடியிருப்பு பகுதிதியில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது.

ஆனால் அந்த பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதியில் பயங்கரமாக மோதியதில் கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 கட்டிடங்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மதியம் நேரம் என்பதால் தங்கும் விடுதிக்கு மதிய உணவு அருந்த பயிற்சி டாக்டர்கள் வந்துள்ளனர். இதனால் பலர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி சேதம் அடைந்துள்ள பதைபதைக்கும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com