தமிழக மக்களுக்கு எனது கனிவான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! - பினராயி விஜயன்

இந்தப் பொங்கல் நன்னாள், நம் அனைவரது வாழ்விலும் புதிய ஒளியை ஏற்றி வைக்கட்டும். நாம் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும்
தமிழக மக்களுக்கு எனது கனிவான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! - பினராயி விஜயன்
Published on

இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "உழைப்பின் உன்னதத்தையும், இயற்கையின் கொடையையும் போற்றும் உன்னதத் திருவிழாவான இந்தப் பொங்கல் நன்னாள், நம் அனைவரது வாழ்விலும் புதிய ஒளியை ஏற்றி வைக்கட்டும்.

இந்த அறுவடைப் பண்டிகை, மக்களிடையே நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகிய பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என விழைகிறேன்.

ஒரு சமூகம் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டுமானால், அங்கு சமத்துவமும் நீதியும் நிலைபெற வேண்டும். அந்த வகையில், இந்தப் பொங்கல் திருநாள்:

அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கவும், ஒவ்வொரு மனிதரும் தகுந்த கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும், அனைவரது நல்வாழ்விற்காகவும் நாம் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com