பஹல்காம் தாக்குதல் - உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்த ஜம்மு காஷ்மீர் அரசு

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயல்களுக்கு நமது சமூகத்தில் எந்த இடமும் இல்லை.பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது.
பஹல்காம் தாக்குதல் - உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்த ஜம்மு காஷ்மீர் அரசு
Published on

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு இழப்பீடு அறிவிப்பித்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், "நேற்று பஹல்காமில் நடந்த இழிவான பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன்.

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயல்களுக்கு நமது சமூகத்தில் எந்த இடமும் இல்லை.

அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இழந்த விலைமதிப்பற்ற உயிர்களுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது. இந்த காட்டுமிராண்டித்தனத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com