பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்: உள்துறை அமைச்சகம்

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது.இந்த விருதுகளுக்கு ஜூலை மாதம் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்: உள்துறை அமைச்சகம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இனம், தொழில், பதவி, பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று தொடங்கியது. ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேசிய விருதுகள் இணையதளமான https://awards.gov.in என்ற தளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பமுடியும்.

இதுதொடர்பான விரிவான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://mha.gov.in மற்றும் பத்ம விருதுகளுக்கான இணைய தளமான https://padmaawards.gov.in என்ற தளத்திலும் உள்ளன. விருதுகள் தொடர்பான விதிகள் இணையதளத்தில் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளன என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com