மகா கும்பமேளா: இதுவரை 7 கோடி பக்தர்கள் புனித நீராடல்

கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3.50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.மகா கும்பமேளாவின் 4-வது நாளான இன்று சுமார் 30 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.
மகா கும்பமேளா: இதுவரை 7 கோடி பக்தர்கள் புனித நீராடல்
Published on

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை என மொத்தம் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மகா கும்பாமேளா நிகழ்ச்சியில் இதுவரை 7 கோடி பேர் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3.50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

மகா கும்பமேளாவின் 4-வது நாளான இன்று சுமார் 30 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com