டெல்லி - டேராடூன் விரைவுச் சாலை பணிகளை முடிக்க தடையாக இருக்கும் ஒரே ஒரு வீடு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தியது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து
டெல்லி - டேராடூன் விரைவுச் சாலை பணிகளை முடிக்க தடையாக இருக்கும் ஒரே ஒரு வீடு
Published on

212 கி.மீ நீளமுள்ள டெல்லி-டேராடூன் விரைவுச் சாலைப் பணியை முடிக்க அப்பகுதியில் அமைந்துள்ள இடத்தில 1,600 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வீடு தடையாக உள்ளது.

1998 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச வீட்டுவசதி வாரியம் தனது நிலத்தை கையகப்படுத்த முயற்சித்ததை எதிர்த்து வீர்சென் சரோஹா என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்றம் வீர்சென் சரோஹாவிற்கு சாதகமாக தீர்ப்பளித்தது.

இப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக அவரது நிலத்தை கையகப்படுத்தியதால், வீர்சென் சரோஹாவின் பேரன் லக்ஷயவீர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து. ஏப்ரல் 16 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த விரைவுச் சாலை கட்டி முடிக்கப்பட்டவுடன், டெல்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com