ஒடிசாவில் கரடியிடம் சிக்கிய கணவரை துணிச்சலாக போராடி காப்பாற்றிய பெண்..!

காட்டில் இலைகள் சேகரித்துக் கொண்டிருந்தபோது கரடி கூட்டம் சுற்றி வளைத்தது.ஒரு கரடி கணவனை கடுமையாக தாக்தியதால், மனைவி கரடியுடன் சண்டையிட்டார்.
ஒடிசாவில் கரடியிடம் சிக்கிய கணவரை துணிச்சலாக போராடி காப்பாற்றிய பெண்..!
Published on

ஒடிசா மாநிலம் கரன்ஜியாவில் உள்ள மிலு என்ற கிராமத்தில் மால்டே சோரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி லிலி சோரனுடன் சேர்ந்து காட்டில் இலைகள் சேகரிப்பதற்கான சென்றார்.

அடர்ந்த காட்டிற்குள் இலைகள் சேகரித்துக் கொண்டிருக்கும்போது திடீரென 6 கரடிகள் அடங்கிய கூட்டம் அவர்களை சுற்றிக் கொண்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்துடன் நின்றனர்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த கரடிகளில் ஒன்று மால்டே சோரன் மீது பாய்ந்து கடுமையான தாக்கியது. கரடிகள் சுற்றி நிற்க, ஒரு கரடி தனது கணவனை கடுமையாக தாக்கிய நிலையில் லிலி சோரன் அஞ்சி ஓடவில்லை. தனது கையில் வைத்திருந்து கோடரி போன்ற ஆயுதத்தால் துணிச்சலாக தாக்கினார். இதனால் கரடி பயந்து மால்டே சோரனை விட்டுவிட்டு ஓடியது.

பலத்த காயம் அடைந்த மால்டே சோரன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கேர்க்கப்பட்டது. பின்னர் உயர்சிகிச்சைக்கான கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஒடிசாவில் யானைக் கூட்டம் கிராம மக்களை மிதித்து கொலை செய்ய நிலையில், தற்போது கரடிக்கூட்டம் மக்களை தாக்க தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com