தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி நோட்டீஸ்!

193 MPs have signed the notice. 193 எம்பிக்கள் நோட்டீஸில் கையெழுத்திட்டுள்ளனர்.ஆம் ஆத்மி கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி நோட்டீஸ்!
Published on

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரும் தீர்மானத்தில் குறைந்தபட்சம் மக்களவையில் 100 எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டும், மாநிலங்களவையில் 50 எம்பிக்கள் கையெழுத்திட வேண்டும். இந்நிலையில் நோட்டீஸில் 130 மக்களவை எம்.பி.க்களும், 63 மாநிலங்களவை எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியக் கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சி மற்றும் சில சுயேச்சை எம்பிக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நோட்டீஸில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுதல், தேர்தல் மோசடி, எஸ்ஐஆர் முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டுள்ளன.

இந்திய வரலாற்றிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி நோட்டீஸ் அளிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com