இனி கேரளா அல்ல 'கேரளம்'... பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மலையாள மொழியில் 'கேரளம்' என்று அழைக்கப்படுவதை, அதிகாரப்பூர்வ பெயராக மாற்ற வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. 'கேரளம்' என்பதற்கு "தென்னை மரங்கள் நிறைந்த நிலம்" என்று அர்த்தம்.
இனி கேரளா அல்ல 'கேரளம்'... பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Published on

'கேரளா'வை 'கேரளம்' என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டப்பேரவையில் இந்த பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது. ஆனால், ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்றே அழைக்க வேண்டும் என அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பெயர் நடைமுறைக்கு வரும்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com