தொழில்நுட்ப கோளாறு மட்டுமே.. தேஜஸ் போர் விமான விபத்து குறித்து HAL விளக்கம்

விபத்தில் விமானத்தின் Airframe கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு மட்டுமே.. தேஜஸ் போர் விமான விபத்து குறித்து HAL விளக்கம்
Published on

இந்திய விமானப்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் பயனப்டுத்தப்பட்டு வருகின்றன. 

கடந்த பிப்ரவரி 7 அன்று, ஒரு முக்கிய விமானத் தளத்தில் பயிற்சியை முடித்து தரையிறங்கும்போது பிரேக் செயலிழந்து தேஜஸ் விமானம் விபத்துக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.

விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பியதாகவும், விபத்தில் விமானத்தின் Airframe கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது தவறான தகவல் என தேஜஸ் விமான தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (HAL) அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்றும், அது ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமகால போர்விமானங்களில் உலகிலேயே மிகச்சிறந்த பாதுகாப்பு கொண்ட விமானம் தேஜஸ் என்றும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய விமானப்படையிடம் உள்ள சுமார் 30-35 தேஜஸ் விமானங்கள் அனைத்தும் பரிசோதனைக்க்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய விமானப்படையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com