பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தமிழக தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது
Published on

நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. 

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. 10-வது முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழக தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இன்று பிற்பகல் நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவெளியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை சில மாநில முதல்வர்கள் புறக்கணித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புறக்கணித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com