என்.சி.பி. மூத்த தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!

பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட வேண்டாம் என்று கட்சித் தலைமை வேண்டுகோள்
என்.சி.பி. மூத்த தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
Published on

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இன்று பிற்பகல் புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை தொடர்பான பிரச்சினைகள், இருமல் மற்றும் காய்ச்சல் நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலையில், இன்று சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முதலில் பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புனேயில் உள்ள ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். யாரும் பயப்பட வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது மகளும், எம்பியுமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட வேண்டாம் என்று கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளில் சரத் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com