யமுனை நீரை குடித்த ஹரியானா முதல்வர்: பாசாங்கு காட்டினார் எனக்கூறிய அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லிக்கு குடிநீர் வழங்கும் யமுனை நதியில் விஷம் கலந்ததாக ஹரியானா மாநில அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.யமுனை நீரை குடித்த ஹரியானா முதல்வர், விஷம் இல்லை என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது எனத் தகவல்.
யமுனை நீரை குடித்த ஹரியானா முதல்வர்: பாசாங்கு காட்டினார் எனக்கூறிய அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லி வழியாக பாயும் யமுனை நதியில் இருந்து டெல்லிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. யமுனை நதி நீரை சுத்திகரித்து டெல்லி மக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது.

டெல்லி மக்களின் குடிநீ்ர் ஆதாரமாக விளங்கும் யமுனை நதி நீரில் விஷம் கலந்ததாக ஹரியானா மாநில அரசு மீது கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.

பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு பதில் அளித்திருந்தனர். இதற்கிடையே ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி யமுனை ஆற்றில் இறங்கி, ஓடிய இரண்டு கைகளால் நீரை எடுத்து குடித்தார். அப்போது நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் விஷம் (நச்சு) கலக்கப்படவில்லை என முடிவு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.

நயாப் சிங் சைனி யமுனை நீரை குடிக்கும் வீடியோவை போஸ்ட் செய்த கெஜ்ரிவால் "தண்ணீரை குடிப்பதுபோல் நயாப் சிங் சைனி பாசாங்கு காட்டுகிறார். உண்மையிலேயே நீரை மீண்டும் ஆற்றில் துப்பினார். அவர்களால் குடிக்க முடியாத நச்சு கலந்த தண்ணீரை மக்கள் குடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இது நடக்க நான் விடமாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு நயாப் சிங் சைனி "கெஜ்ரிவால் வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லி வருகிறார்" என காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.

யமுனை நிதியில் இருந்து டெல்லி மக்களின் குடிநீருக்கு எடுக்கப்படும் நீரில் அமோனியாக அளவுக்கு அதிகமாக கலந்து இருப்பதாக டெல்லி மாநில முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com