தேசிய சுற்றுலா தினம்: இந்த ஆண்டின் கருப்பொருள் இதுதான்

1982 ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக அறிவித்தது.இந்த ஆண்டு சுற்றுலா தினத்தின் கருப்பொருள் இதை வலியுறுத்துகிறது.
தேசிய சுற்றுலா தினம்: இந்த ஆண்டின் கருப்பொருள் இதுதான்
Published on

தேசிய சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய சுற்றுலா அமைச்சகம், 1982 ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக அறிவித்தது.

இந்த தினத்தின் நோக்கம், இந்தியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதும், நாட்டின் பல சுற்றுலாத் தலங்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்குவதும் ஆகும்.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியா வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பார்க்க மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் சுவைக்க பலவித உணவுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றுலாத் தளமும் தனித்துவமான வரலாற்றைக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆண்டு சுற்றுலா தினத்தின் கருப்பொருள் 'உள்ளடக்கிய வளர்ச்சிகான சுற்றுலா'(Tourism for Inclusive Growth). சுற்றுலாவின் மூலம் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சமூத்தின் அனைத்து பிரிவினருக்கும் நாட்டின் சுற்றுலா கட்டமைப்பை கிடைக்கச்செய்வது உள்ளிட்ட குறிக்கோள்களை இந்த ஆண்திற்கான கருப்பொருள் உள்ளடக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com