நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கூட்டாக நோட்டீஸ்

145 உறுப்பினர்களின் கையெழுத்துகளுடன் கூடிய நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் இதில் அடங்குவர்.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கூட்டாக நோட்டீஸ்
Published on

டெல்லியில் உள்ள நீதிபதி யாஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்தின் போது எரிந்த ரூபாய் நோட்டுக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டும் உறுதியானது.

இந்நிலையில் அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களிடம் எம்.பிக்கள்   திங்கட்கிழமை நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மக்களவையில் 145 உறுப்பினர்களின் கையெழுத்துகளுடன் கூடிய நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதே தீர்மான நோட்டீஸை 63 மாநிலங்களவை உறுப்பினர்கள் சபாநாயகரிடம் அளித்தனர். ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் இதில் அடங்குவர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com