தெலுங்கானாவில் வினோத கிராமம்: திருமணமான பெண்கள் இறைச்சி சாப்பிட தடை

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன.திருவிழாவிற்கு முந்தைய நாள் சீதம்மா வணங்கப்படுகிறார்.
தெலுங்கானாவில் வினோத கிராமம்: திருமணமான பெண்கள் இறைச்சி சாப்பிட தடை
Published on

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் வால்யநாயக் தண்டா என்ற கிராமத்தில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது.

ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு மருமகளாக மாறினால் அவள் வாழ்நாள் முழுவதும் இறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு காலரா பரவிய போது கிராமத் தலைவர் சீதம்மா மற்றும் மாரியம்மாவை வணங்கினார்.

கிராமத்தில் மருமகள்கள் காலரா வராவிட்டால் இறைச்சியைத் தொட மாட்டோம் என்று அப்போது சத்தியம் செய்தனர். இந்த கிராமத்தில் காலரா வராததால் இது தெய்வங்களின் அருள் என்று நம்பி இந்த வழக்கத்தைத் தொடர்கிறார்கள்.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன. திருவிழாவிற்கு முந்தைய நாள் சீதம்மா வணங்கப்படுகிறார். வெள்ளி அம்மனின் சிலைகள் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

கிராமத்து குழந்தைகள் அல்லது ஆண்கள் யாராவது இறைச்சி சாப்பிட வேண்டியிருந்தால் அவர்கள் கிராமத்திற்கு வெளியே வெவ்வேறு சமையல் பாத்திரங்களில் சமைத்து, சாப்பிட்டு குளித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவார்கள் என்று கிராம மக்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com