வாக்கு வங்கிக்காக அனைத்தையும் எதிர்க்கிறார்: மம்தாவை தாக்கிய அமித்ஷா

2026 ஏப்ரலுக்கு பின் முதல் மந்திரி பதவியில் மம்தா பானர்ஜி இருக்க மாட்டார். வாக்கு வங்கிக்காக அனைத்து தாழ்ந்த நிலைப்பாடுகளையும் மம்தா பானர்ஜி தாண்டிவிட்டார்.
வாக்கு வங்கிக்காக அனைத்தையும் எதிர்க்கிறார்: மம்தாவை தாக்கிய அமித்ஷா
Published on

கொல்கத்தா:

பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இருநாள் பயணமாக மேற்கு வங்கம் வந்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரசை விரட்டியடிக்க வேண்டும்.

முதல் மந்திரி மம்தா பானர்ஜியை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்தவே நமது ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்த்தார். இதன்மூலம் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரியரை அவர் அவமதித்துள்ளார்.

வரும் சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜிக்கு தக்க பாடம் புகட்ட மேற்கு வங்க தாய்மார்கள் மற்றும் சகோதரியர் தயாராகி விட்டனர். 2026 ஏப்ரலுக்கு பின் முதல் மந்திரி பதவியில் மம்தா பானர்ஜி இருக்க மாட்டார். தன் ஓட்டு வங்கிக்காக, அனைத்து தாழ்ந்த நிலைப்பாடுகளையும் மம்தா பானர்ஜி தாண்டி விட்டார் என தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com