தேர்தல் கணக்கு... பாஜக மாநிலங்களவை எம்பிக்கு விருது வழங்கிய மம்தா பானர்ஜி

நாகேன் ராய்க்கு பங்கா விபூஷண் விருது வழங்கி கவுரவைக்கப்பட்டது. ராஜ்பன்ஷி சமூகத்தின் முக்கிய தலைவராக ராய் உள்ளார்.
தேர்தல் கணக்கு... பாஜக மாநிலங்களவை எம்பிக்கு விருது வழங்கிய மம்தா பானர்ஜி
Published on

பாஜக மாநிலங்களவை எம்பியான நாகேன் ராய்க்கு மேற்கு வங்கத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பங்கா விபூஷண் விருது வழங்கி கவுரவைக்கப்பட்டது.

மேற்குவங்கத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி, நாகேன் ராய்க்கு விருது வழங்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பலவீனமாக உள்ள வடக்கு வங்கதேசத்தில் உள்ள ராஜ்பன்ஷி சமூகத்தின் முக்கிய தலைவராக ராய் இருப்பதால் இந்த விருது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்திய தேர்தல்களில் வடக்கு வங்கதேசத்தில் பாஜக நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com