உண்மையிலே உழைத்தவர்களைத் தேர்ந்தெடுங்கள் - மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள்

டெல்லி மக்கள் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் ஒரு வாக்கு டெல்லியில் மாற்றத்தின் அடையாளமாக இருக்கும்.
உண்மையிலே உழைத்தவர்களைத் தேர்ந்தெடுங்கள் - மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள்
Published on

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தள பதிவில்,

டெல்லி மக்கள் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஒரு வாக்கு டெல்லியில் மாற்றத்தின் அடையாளமாக இருக்கும்.

டெல்லி முன்பு போல வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டுமானால் , டெல்லிக்காக உண்மையிலேயே உழைத்தவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து உங்களை ஏமாற்றவில்லை என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com