இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இரவு விருந்து கொடுத்த மல்லிகார்ஜுன கார்கே!

திமுக எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு கலந்துகொண்டனர்.பாதிவழியில் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இரவு விருந்து கொடுத்த மல்லிகார்ஜுன கார்கே!
Published on

இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியின் தாஜ் பேலஸ் ஓட்டலில் இரவு விருந்து வைத்துள்ளார்.

இதில், சரத் பவார், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ், ஜெயா பச்சன், திமுக எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, உத்தவ் சிவசேனாவின் சஞ்சய் ராவத் மற்றும் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சமீபத்தில் ராகுல் காந்தியின் வீட்டில் இதேபோல இரவு விருந்து நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் வாக்கு திருட்டை கண்டித்து பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போலீசாரால் பாதிவழியில் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com