அரசு பள்ளிகளில் முட்டை வழங்கும் திட்டத்திற்கான நிதியை நிறுத்துவதாக மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் 2023 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டு வந்தது.
அரசு பள்ளிகளில் முட்டை வழங்கும் திட்டத்திற்கான நிதியை நிறுத்துவதாக மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
Published on

தமிழ்நாட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசை பின்பற்றி பல மாநிலங்களும் ஊட்டச்சத்திற்காக பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அவ்வகையில் மகாராஷ்டிராவில் 2023 ஆம் ஆண்டு நவம்பரில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது. அதே சமயம் முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டு வந்தது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் 24 லட்சம் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முட்டை வழங்குவதற்கு மாநில அரசு ஒரு வருடத்திற்கு ரூ.50 கோடி செலவு செய்கிறது.

அரசின் இந்த திட்டத்திற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்ததை அடுத்து, 40% பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பள்ளிகளுக்கு முட்டை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் அக்சய பாத்ரா என்ற என்.ஜி.ஓ. மூலம் வழங்கப்படும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளுக்கான மதிய உணவுடன் முட்டை மற்றும் சர்க்கரை வழங்குவதற்கான நிதியை நிறுத்துவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவிக்ரு முன்னதாக மத்தியப்பிரதேசம், கோவா மாநிலங்களில் முட்டை வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதே சமயம் தென்னிந்திய மாநிலங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com