#KeralaLottery லாட்டரி சீட்டு... ரூ.20 கோடி பரிசு தொகைக்கு வழக்கு போட்ட 2 பேர் - கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

டிராவல்ஸ் வாகனத்தில் வைத்திருந்த அந்த சீட்டு எப்படியோ காணாமல் போய்விட்டது.கேரள ஐகோர்ட்டு மாநில லாட்டரி இயக்குனருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.
#KeralaLottery லாட்டரி சீட்டு... ரூ.20 கோடி பரிசு தொகைக்கு வழக்கு போட்ட 2 பேர் - கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
Published on

கேரளாவில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.20 கோடி எக்ஸ்.சி. 138455 என்ற எண்ணுக்கு கிடைத்தது. இந்த லாட்டரி சீட்டை வைத்திருந்த எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு முதல் பரிசு கிடைத்ததாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்தில் ஒப்படைத்தார்.

இந்தநிலையில் எர்ணாகுளத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சஜிமோன் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், 'நான் மூவாற்றுபுழாவில் எனது மனைவி வீட்டுக்கு சென்றிருந்தபோது எடுத்த லாட்டரி சீட்டுக்குத்தான் முதல் பரிசு கிடைத்து உள்ளது. எனது டிராவல்ஸ் வாகனத்தில் வைத்திருந்த அந்த சீட்டு எப்படியோ காணாமல் போய்விட்டது. எனவே, பரிசு தொகை ரூ.20 கோடியை எனக்கே தர வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கேரள ஐகோர்ட்டு மாநில லாட்டரி இயக்குனருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

இந்த விவகாரத்தில் கேரள லாட்டரி இயக்குனரகம் அளித்த அறிக்கையை பரிசீலித்த ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சஜிமோன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் லாட்டரி சீட்டு கைவசம் வைத்து இருந்த அதிர்ஷ்டசாலிக்கு முதல் பரிசு ரூ.20 கோடி வழங்க தீர்ப்பளித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com