சுபான்ஷு சுக்லாவின் வரலாற்று விண்வெளி திட்டம்: மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்

சர்வதேச விண்வெளி மையம் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது.சுபான்ஷு சுக்லா தனது குடும்பத்தினருடன் நேற்று காலை இந்தியா வந்தடைந்தார்.
சுபான்ஷு சுக்லாவின் வரலாற்று விண்வெளி திட்டம்: மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்
Published on

புதுடெல்லி:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா. இவர், நாசா மற்றும் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனம் சார்பில் 'ஆக்சியம்- - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, 3 பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 25ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தை மறுநாள் அடைந்தனர். கடந்த ஜூலை 15-ல் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்தப் பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது. நேற்று காலை இந்தியா வந்தடைந்த அவரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர்

இந்நிலையில், வளர்ச்சியடைந்த இந்தியாவில் விண்வெளி திட்டங்களில் முக்கியமான ஒன்றான சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதல் முறையாக இந்தியர் சென்றது தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com