மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Published on

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நிறைவடைந்த நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மக்களவையை ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லா இந்த அமர்வின் போது 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவையின் வேலை நேரம் 118% க்கும் அதிகமாக இருந்ததாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், வக்ஃபு திருத்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்ற சோனியா காந்தியின் கூற்று துரதிர்ஷ்டவசமானது மற்றும் அவையின் கண்ணியத்திற்கு எதிரானது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com