இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறுவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு..!

2024 மக்களவை தேர்தலுக்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது.தற்போது தேசிய அளவில் இக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறுவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு..!
Published on

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்றாலும், பாஜக-வை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் சேர்ந்தது.

இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என அதிலுள்ள பெரும்பாலான கட்சிகள் தெரிவித்து வந்தன. இருந்தபோதிலும் பாராளுமன்ற கூட்டம் போன்றவற்றில் ஒருமித்த எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் இந்தியா கூட்டணி என்ற பெயரில்தான் ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தது.

இந்த நிலையில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com