வெறும் 800 வார்த்தைகளில்.. நாட்டின் மிகக் குறுகிய பட்ஜெட் உரை எப்போது நிகழ்த்தப்பட்டது தெரியுமா?

இது மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலத்தில் இரண்டாவது பட்ஜெட்டாகும்.இந்த சுருக்கமான உரை சுதந்திர இந்தியாவில் இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகக் குறுகிய பட்ஜெட் உரையாக உள்ளது.
வெறும் 800 வார்த்தைகளில்.. நாட்டின் மிகக் குறுகிய பட்ஜெட் உரை  எப்போது நிகழ்த்தப்பட்டது தெரியுமா?
Published on

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டிற்கான தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இது மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலத்தில் இரண்டாவது பட்ஜெட்டாகும். விவசாயிகள், பெண்கள், வரி செலுத்துவோர் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி உள்ளனர்.

மக்களவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் அதன்மீது உரையாற்ற உள்ளார். இந்நிலையில் நாட்டில் இதுவரை மிக குறைந்த நேரம் நிகழ்த்தப்பட்ட பட்ஜெட் உரை குறித்த சுவாரஸ்ய தகவல் கவனம் பெற்றுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் 1977 ஆம் ஆண்டு மிகக் குறுகிய பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் 800 வார்த்தைகளைக் கொண்ட இடைக்கால பட்ஜெட்டை வழங்கினார். இந்த சுருக்கமான உரை சுதந்திர இந்தியாவில் இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகக் குறுகிய பட்ஜெட் உரையாக உள்ளது.

மறுபுறம், மிக நீண்ட உரை நிர்மலா சீதாராமனால் நடத்தப்பட்டது. பிப்ரவரி 1, 2020 அன்று அவர் 2:40 மணி நேர உரையை நிகழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com