Jharkhand: சொகுசு கார் மோதி 4 சிறுவர்கள் உயிரிழப்பு.. உடல்களை சாலையில் வைத்து 16 மணி நேரமாக மக்கள் போராட்டம்

வேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதியது.நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
விபத்து ஏற்படுத்திய கார் 
விபத்து ஏற்படுத்திய கார் 
Published on

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் பிபர்வார் காவல் எல்லைக்குட்பட்ட சிரையாதந்த் பகுதியில் நேற்று இரவு வேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று, நான்கு சிறுவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

இதில் விகாஸ் குமார் (15), மஞ்சித் மஹதோ (14), பிரதாப் குமார் (15) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்காவது சிறுவன் சோன் குமார் (15), மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தான்.

 ஆத்திரமடைந்த கிராம மக்களும் உறவினர்களும் சிறுவர்களின் உடல்களை சாலையில் வைத்து நேற்று இரவு முதல் மறியலில் ஈடுபட்டனர்.

இன்று மதியம் வரை சுமார் 16 மணி நேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்தால், நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

காவல்துறை போராட்டக்காரர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். அரசின் விதிகளின்படி உரிய இழப்பீடு பெற்றுத் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதிகாரிகளின் உறுதிமொழிக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர். தற்போது அந்தப் பகுதியில் போக்குவரத்து மெதுவாகச் சீராகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com