ஜெட்டாவில் இருந்து இந்தியாவுக்கு 10 சிறப்பு விமானங்களை இயக்கும் இண்டிகோ..!

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.அவர்களுக்கான சிறப்பு விமானம் இயக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜெட்டாவில் இருந்து இந்தியாவுக்கு 10 சிறப்பு விமானங்களை இயக்கும் இண்டிகோ..!
Published on

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது, மேலும் சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற நாடுகளின் முக்கிய இடங்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த அங்குள்ள இந்தியர்கள், இந்தியாவில் இருந்து சென்றவர்கள் இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இண்டிகோ 10 சிறப்பு விமானங்களை இயக்குகிறது.

முன்னதாக அபுதாபியில் இருந்து 8 நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com