விவாதத்தை ஏற்படுத்திய டிரை கிளீனிங் தம்பதியின் வருமானம்

இந்த வருமானம் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டனர்.வீடியோ இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.
விவாதத்தை ஏற்படுத்திய டிரை கிளீனிங் தம்பதியின் வருமானம்
Published on

சிறிய தொழில் செய்தாலும், திறம்பட செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம் என்பதை உறுதிபடுத்துவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் நளினி உனாகர் என்ற பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு தகவல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நளினி உனாகரின் வீட்டுக்கு அருகே ஒரு டிரை கிளீனிங் கடைக்காரரிடம் அவரது வருமானம் குறித்து பேசும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. கடைக்காரரும், அவரது மனைவியும் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிப்பதாக கூறுகிறார்கள். தினமும் சுமார் 350 துணிகளை அயர்ன் செய்வதன் மூலமும், விலை உயர்ந்த புடவைகள் மற்றும் சூட்களை டிரைகிளீனிங் செய்வதன் மூலமும் ஒரு நாளைக்கு ரூ.10,500 வரை வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்கள். சொந்தக்கடை என்பதால் வாடகை கிடையாது, மின்சாரக் கட்டணம் மற்றும் ஆட்கள் கூலி போக மாதம் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் வரை லாபமாக கிடைப்பதாக கூறுகிறார்கள். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இந்த வருமானம் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டனர்.

அதேநேரம் சிலர், இதுபோன்று வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என பதிவிட்டுள்ளனர். இவ்வாறு பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்ட நிலையில் நளினி உனாகரின் இந்த வீடியோ இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com