அமெரிக்காவிடம் இருந்து முதற்கட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களை பெறுகிறது இந்தியா..!

600 மில்லியன் டாலரில் 6 ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம்.கடந்த வருடமே இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்காவிடம் இருந்து முதற்கட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களை பெறுகிறது இந்தியா..!
Published on

அமெரிக்காவிடம் இருந்து 600 மில்லியன் டாலருக்கு அப்பாச்சி ஏ.ஹெச்.64இ (Apache AH-64E) அட்டாக் ஹெலிகாப்டர் வாங்க இந்தியா கடந்த 2020ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. கடந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் முதற்கட்டமாக 3 ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கும் என இந்தியா எதிர்பார்த்தது.

சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக காலதாமதம் ஆன நிலையில் இந்த மாதத்திற்குள் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க இருக்கிறது. அதில் முதற்கட்டமாக 3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தடையும். இந்த ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பிற்காக குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக 3 ஹெலிகாப்டர் இந்த வருட இறுதிக்குள் இந்தியா வந்தடையும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com