பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைபாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது- ஜெய்சங்கர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. சண்டடை நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைபாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது- ஜெய்சங்கர்
Published on

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.

இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

பின்னர், இருநாடுகளும் சண்டையை கைவிடுவதாக அறிவித்தன.

இந்நிலையில், சண்டை நிறுத்தம் குறித்து மத்திய வௌியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா சமரசமின்றி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது இனியும் தொடரும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com