குட்கா வாங்க பணம் தராத கணவன்.. 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்த மனைவி

30 வயதுடைய அந்தப் பெண்ணும், அவரது 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.குழந்தைகள் முன்னிலையில் குட்கா சாப்பிடுவதை நிறுத்துமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார்.
குட்கா வாங்க பணம் தராத கணவன்.. 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்த மனைவி
Published on

உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவர் பணம் தராததால் தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் 30 வயதுடைய அந்தப் பெண்ணும், அவரது 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 5 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

கணவன் குட்கா பழக்கத்தை விட்டுவிடுமாறு கூறியதால் கோபம் கொண்ட அந்தப் பெண் இந்த கொடூரமான முடிவை எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் முன்னிலையில் குட்கா சாப்பிடுவதை நிறுத்துமாறு கணவர் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ளது.

அந்தப் பெண் என்ன வகையான விஷத்தைப் பயன்படுத்தினார். அது அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com