ராக்கி கட்டிய 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணன்

33 வயதான சுர்ஜித் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார்.மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார்.
ராக்கி கட்டிய 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணன்
Published on

உத்தரபிரதேசத்தில் ரக்ஷா பந்தன் அன்று தனது கையில் ராக்கி கட்டிய தங்கை முறை உறவு கொண்ட 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

33 வயதான சுர்ஜித் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவனது மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார். இதனையடுத்து இரவில் மது அருந்திய சுர்ஜித் போதையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். பின்னர் அவளது உடலை அந்த அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல சித்தரித்துள்ளான்.

அடுத்த நாள் தனது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியைடந்த அவளது அப்பா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

முதலில் இதை தற்கொலை என நினைத்த போலீசார் சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்களிடம் விசாரித்த போலீசார் முன்னுக்கு பின் முரணாக பேசிய சுர்ஜித்தை கைது செய்து விசாரித்தனர். பின்னர் சுர்ஜித் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com