வீடியோ: தாக்குதல் நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த அமித் ஷா

பஹல்காம் தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர்.தாக்குதலில் பலியானர்வர்கள் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.
வீடியோ: தாக்குதல் நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த அமித் ஷா
Published on

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாக்குதலில் பலியானர்வர்கள் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து தாக்குதல் நடந்த இடத்திற்கு ராணுவ ஹேலிகாப்டரில் சென்ற அவர் நேரில் ஆய்வு செய்தார். மேலும் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com