டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை- விமான சேவை கடும் பாதிப்பு

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை- விமான சேவை கடும் பாதிப்பு
Published on

தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி சுழற்சிகளும் மழையை தீவிரப்படுத்தியுள்ளன. இதன் மறைமுக தாக்கமாக டெல்லி உள்பட வட மாநிலங்களில் மழை பெய்ய காரணமாக அமைந்துள்ளது. இது மேற்கு தொந்தரவுடன் இணைந்து மழையை தீவிரப்படுத்துவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், டெல்லி, இமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து உள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 25 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

மேலும், 100 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மே 23 முதல் மே 25 வரை இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com