டெல்லியில் கடும் பனிமூட்டம் எதிரொலி: விமான சேவை பாதிப்பு- பயணிகள் அவதி

ஆனந்த் விகார் பகுதியில் 457க்கு மேல் தாண்டி அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.டெல்லியில் இன்று காலை மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது.
டெல்லியில் கடும் பனிமூட்டம் எதிரொலி: விமான சேவை பாதிப்பு- பயணிகள் அவதி
Published on

தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் 'அபாயகரமான' (Hazardous) நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் மற்றும் குறைவான காற்று வேகம் காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நச்சுப்புகை அதிகரித்த நிலையில் காற்றின் தரக்குறியீடு (AQ) 459 என்ற மிக மோசமான அளவு பதிவானது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

டெல்லியிலிருந்து சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் ரத்தானதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

மேலும், டெல்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கான ரெயில் சேவை கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com