தேசிய பாதுகாப்பில் ராகுல் காந்தியிடம் இருந்து மோடி அரசுக்கு எந்த பாடமும் தேவையில்லை: அனுராக் தாகூர்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் இந்திய நிலங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டன.அதற்குப் பதிலாக ராஜிவ் காந்தி பவுண்டேசன் பணத்தை பெற்றது.
தேசிய பாதுகாப்பில் ராகுல் காந்தியிடம் இருந்து மோடி அரசுக்கு எந்த பாடமும் தேவையில்லை: அனுராக் தாகூர்
Published on

பாஜக எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான அனுராக் தாகூர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்திய பகுதிகள் சீனாவிடம் இழக்கப்பட்டன. மோடி அரசுக்கு தேசிய பாதுகாப்பில் ராகுல் காந்தி பாடம் கற்பிக்க தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் டோக்லாம் மோதல் மற்றும் இந்தியா- சீனா கொள்கை குறித்து மக்களவையில் குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு அனுராக் பதில்அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் இந்திய நிலங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டன. அதற்குப் பதிலாக ராஜிவ் காந்தி பவுண்டேசன் பணத்தை பெற்றது. சீனாவிடம் நிலத்தை இழந்தபோது ஆட்சியில் இருந்த அதே மக்கள் தற்போது எங்களிடம் கேள்வி கேட்கிறார்களா?. இந்திய அரசியலில் இதைவிடப் பெரிய துரதிர்ஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்?

60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த கட்சியும் அதன் குடும்பமும் அதிகாரத்தின் பலன்களை அனுபவித்தபோதிலும், அதன் அரசாங்கங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நிலத்தை சீனாவிடம் இழந்தன.

பாகிஸ்தானிடமிருந்து நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியாதவர்கள், இப்போது பொய்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள். ராகுல் காந்தியிடமிருந்து எங்களுக்குத் தேசியப் பாதுகாப்பு குறித்த பாடங்கள் தேவையில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com